ஓவியம் உயிர் பெறுவது எப்படி!

ஓவியத்தில் ஆர்வமுள்ளவர்களுக்காக இந்த பதிவு. முக்கியமாக ஒரு ஓவியம் எவ்வாறு உயிர் பெறுகிறது என்பது கலை மட்டுமல்ல, அது ஒரு சயின்ஸ் என்பதை புரிய வைக்க இந்த பதிவு உதவும் என்று நம்புகிறேன்.

நிலை 1 - அடித்தளம் 
நாம் ஒரு காட்சியை அல்லது ஏதோ ஒரு புகைப்படத்தை பார்த்து "ஹ்ம்ம்..இதை வரைந்தால் நன்றாக இருக்குமே" என்று தோன்றும். பேப்பர், பென்சில் எடுத்து வைத்துக் கொண்டு  உட்கார்ந்தால் எங்கு, எப்படி ஆரம்பிக்கலாம்  என்பது பெரும்பாலும் மலைப்பாக இருக்கும்.

டிப்ஸ் -
  • முகம் நேராக இருந்தால் பார்ப்பதற்கு போர் அடிக்கும். கொஞ்சம் சாய்ந்த மாதிரி, எங்கேயோ பார்ப்பது போல் இருந்தால் நாச்சுரலாக இருக்கும்.
  • பேப்பரில் எவ்வளவு ஏரியா படம் இருக்கப்போகிறது என்பதை தீர்மானம் செய்யுங்கள்.  அதற்கு  தோராயமான அளவுகள் இருந்தால் எளிதாக இருக்கும்.

மிகவும் க்ளோஸ்-அப் என்பதால் நான் நெற்றியை அடிப்படை அளவுகோலாக எடுத்துக் கொண்டேன். பலர் கட்டங்கள் (GRID )வரைந்து அளவு எடுப்பதும் உண்டு. ஆனால் கண் திட்டத்தில் , கையில் பென்சிலை வைத்து அளவு எடுப்பது நல்ல பயிற்சி.

Courtesy - http://www.beginnersschool.com/2015/05/04/measuring/

நிலை 2 - கட்டடம் எழுப்புதல் 
அளவுகள் தெரிந்த பின்னர், நாம் உருவத்தின் வெளிக் கோடுகளை வரைய  ஆரம்பிக்கலாம். இந்த நிலையில் ரொம்ப perfection தேவை இல்லை; முக்கியமான அம்சங்களை புரிந்து கொள்ளும் நிலை இது.
கோடுகளை வரைந்த பின்னர், உருவத்தின் dark area எவை என்பதை வரையறுத்துக் கொள்ளுங்கள். 

இந்த dark areas எவை என்பதை mark செய்து கொண்டால் வரையும் உருவம் தட்டையாய் இல்லாமல் , 3D காட்சி போல் பரிணாமங்கள் பெறும். இதைப் பார்க்கும் பொழுது நமக்கு உற்சாகமும், தன்னம்பிக்கையும் கூடும்.

டிப்ஸ் - 2 சூட்சமங்கள்  
1. ANGLE OF LINES - கோடுகளின் கோணம்
இந்த dark areas வரையறுக்கும் கோடுகளை கவனித்தால் அவை மேடுகள் எவ்வாறு  எந்த கோணத்தில் சரிகிறதோ அதே திசையில் ஓடும்.  இதனால் நாம் அந்த பாகங்களின் பருமனை புரிந்து கொள்கிறோம். ஓவியமும் பேப்பரில் இருந்து புடைத்து வெளியே வரும் தோற்றத்தை பெறுகிறது.

2. ENERGY LINES - ராக அலைகள் 
இந்த நிலையில் இன்னும் ஒரு சூட்சமம் இருக்கிறது. இந்த சூட்சமத்தை நான் ENERGY LINES என்று சொல்வேன். மொத்த உருவத்தின் பாகங்களை இணைத்து  அதின் ஒரு கோர்வையாக கவித்துவத்தை தருவது இந்த புரிதல்.
இந்த அலைகளை பென்சிலால் வரைந்து பின்னர் அழித்துக் கொள்ளலாம்.



ENERGY LINES தனியாக பார்க்கும்  பொழுது அதனுடைய உயிரோட்டம் நமக்கு தெளிவாக தெரியும். இங்கே பாருங்கள்.


ஒரு பாடகர் பாடும் கீதத்தில் எல்லா அம்சங்களையும் இணைக்கும் ராகத்தை போல் இந்த சூட்சமம். அதனால்தான் இந்த சூட்சமத்தை 'ராக அலைகள்' என்பேன் !

நிலை 3 - மெருகேற்றுதல் 
இப்போது ஓவியத்தின் எல்லா அம்சங்களும் நம் கட்டுப்பாட்டில் இயங்கத் தொடங்குகிறது. பென்சிலை கீழே வைத்து விட்டு பேனாவையோ, ப்ரஷையோ எடுக்கும் வேளை வந்து விட்டது.
தைரியமாக கோடுகளையோ, வண்ணங்களையோ தீற்ற ஆரம்பியுங்கள்.



நிலை 4 - கேரக்டர் கொடுத்தல் 
இந்த நிலை கடந்த பின்னர் Dark areas இன்னும் வெளிக் கொணருங்கள். இங்கே சிறிது தயங்கினோம் என்றால் ஓவியம் சப்பென்று இருக்கும். CONTRAST வந்தால்தான் ஓவியம் தனித்தன்மை (CHARACTER ) பெற்று உயிர் பெரும்!


இந்த நிலையில் முடித்துக் கொள்ளலாம் . தேவை மற்றும் EXPERIMENT செய்யும் உற்சாகம் இருந்தால் மேற்கொண்டு உங்கள் நகாசு வேலைகளை காண்பிக்கலாம் 


Dr தமிழிசை சௌந்தரராஜன் - க்ராவ்மாகா ஸ்ரீராம்.- 02-09-2019
..........................................................
KravMaga SreeRam
NATHAN'S MEDIA GROUP
Mobile: 0 9380000555
Email: nathansmedia@gmail.com
MARCOM BLOG -  http://marketing-communications-ksr.blogspot.com/
FACEBOOK - http://bit.ly/nmg_fb
LINKED IN -  http://in.linkedin.com/in/ksr960
TWEET - @kravMagaSreeRam

Comments