மானசீக குரு - 02 - செர்ஜியோ டோபி

செர்ஜியோ டோபி Sergio Toppi  (11 October 1932 – 21 August 2012 ) இத்தாலி நாட்டைச் சேர்ந்த காமிக்ஸ் புத்தக ஓவியர் மற்றும் எழுத்தாளர்,
இங்குள்ளது  செர்ஜியோ டோபி  தன்னுடைய ஸ்டைலில்  வரைந்த self -portrait 


நம்மை உடனே கவர்வது  செர்ஜியோ டோபியின் கோடுகள். வடிவங்களின் மேடு பள்ளங்களை தொடர்ந்து செல்லும் கோடுகள் சாதாரண கோட்டோவியத்தை சிற்பமாக செதுக்குகிறது. வெளிச்சம் மற்றும் நிழல்களின் தீவிரத்தை செர்ஜியோவின் கோடுகள் உணர்த்துகின்றன. 
நான் செர்ஜியோவை என் மானசீக குருவாக ஏற்றுக் கொண்ட காரணம் என்னவென்றால், அவருடைய ஓவியங்களை படிக்கும் பொழுது நாம் கீழ்க்கண்ட அவருடைய மேதமைகளுக்கு ரசிகன் ஆகின்றோம் -
  1. உயிருள்ள கோடுகள் 
  2. பல்வேறு ஜியோமெட்ரிக் உருவங்களில் கொலாஜ் ( COLLAGE)
  3. வெவ்வேறு கலாச்சாரங்களை அப்படியே பிரதிபலிக்கும் கேரக்டர்கள் 
  4. அழகுணர்ச்சியை கவிதையாக்கும் மிகைப்படுத்தல்கள் ( EXAGGERATIONS)
  5. கோடுகளின் வண்ணங்களின் சேர்க்கை 



செர்ஜியோவைப் பற்றி ஒரு புகார் என்னவென்றால், அவருடைய ஓவியங்கள் படிப்பவர்களின் கவனத்தை கதையிலிருந்து திசை திருப்புகின்றது என்பதுதான் ! அத்தகைய மேதமை  செர்ஜியோ டோபியை காமிக்ஸ் புத்தக ஓவியர்களை மட்டுமில்லாமல் எல்லா genre ஓவியர்களின் மத்தியிலும் ஒரு அவதார புருஷனாக ஆக்கியுள்ளது.  செர்ஜியோவுக்கென்று ஒரு cult following இருப்பதால் அவர் வரைந்த புத்தகங்கள் பெரும்பாலும் out-of-printஆகவே இருக்கும்!



,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
க்ராவ்மாகா ஸ்ரீராம்
S.SreeRam
NATHAN'S MEDIA GROUP
Mobile: 0 9380000555
Email: nathansmedia@gmail.com

Comments