மானசீக குரு 01 - ஜான் கான்ஸ்டபிள்

அறிமுகம் -  ஜான் கான்ஸ்டபிள்  


18ம் நூற்றாண்டு இங்கிலாந்தில் இயற்கை காட்சிகள் ( landscape ) வரையும் ஓவியர்களுக்கு மரியாதை குறைவு, பைபிள், புராதன இதிகாச காட்சிகள மற்றும் சமுதாயத்தில் உள்ள பெரிய மனிதர்களை (portrait) வரையும் ஓவியர்களுக்குத்தான் முக்கியத்துவம்.  ஆனால் இந்த விமர்சகர்களின் அங்கீகாரத்தை பற்றியெல்லாம் கவலைப் படாமல் ஜான் கான்ஸ்டபிள் தான் பிறந்து, வளர்ந்த  சபாக் (Suffolk) பிரதேசத்தில் உள்ள தேதம் வேல்  ( Dedham Vale) சுற்றியுள்ள இயற்கை காட்சிகளை ஓவியம் தீட்டியதால், இன்றளவும் இந்த இடம் 'கான்ஸ்டபிள் தேசம்' ('Constable Country'.) என்றே வழங்கப்படுகிறது.
சொந்த தேசத்தில் கிட்டாத அங்கீகாரம், கான்ஸ்டபிளுக்கு  பிரான்சில் கிடைத்தது. இவர் தீட்டிய ' வைக்கோல் வண்டி ' (The Hay wain) 1824 பாரிஸ் சலோன் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றது. 

வெளியில் அமர்ந்து (PLEIN AIR) எண்ணை வண்ணங்களை  (OIL paint ) கொண்டு வரைவதில் கான்ஸ்டபிள் முன்னோடி என்று கொள்ளலாம். ஆகையால்தான் இவர் ஓவியங்கள் சூரிய ஒளி மேகங்களிலும்,மரங்களிலும், வயல்களிலும் செய்யும் வர்ண ஜாலங்களை சிறைப் பிடித்தன.  பிற்காலத்தில் வந்த இம்ப்ரெஸ்ஸினிஸ்ட் (impressionist) வகை ஓவியர்கள் கான்ஸ்டபிளை தங்களின் முன்னோடியாக கருதினார்கள்.
கான்ஸ்டபிளின் காலத்தில் இயந்திரங்கள் கொண்டு இயங்கும் தொழில் முறைகள் (Industrial Age) பிரபலமாக இருந்தன.  அனால் மற்ற ஓவியர்களை போல இல்லாமல், இயந்திரங்களை ஒதுக்கி பாரம்பரிய இங்கிலாந்தை நம் கண் முன்னே நிறுத்துவதில் ஜான் கான்ஸ்டபிளுக்கு ஈடு இன்று வரை இல்லை.
அவருடைய ஓவியங்களை இங்கு காணலாம். - https://www.john-constable.org/the-complete-works.html

Comments