அமைப்பு - காம்போசிஷன் - Composition 

வார்த்தைகளை மாற்றியமைத்து. சந்தங்களையும், உவமைகளையும் கூட்டினால் யதார்த்தமான கருத்துகளும் கவிதையாகும்.

ஓவியம் என்பது வரையப்பட்ட கவிதையே.    
எல்லோரும் பார்க்கும் காட்சிகளைத்தான்  ஓவியனும் பார்க்கின்றான். ஆனால் அவனுடைய  கலைக்கண்  ஒரு வடிகட்டி (FILTER) போல செயல்படுகிறது. தன்னுடைய ஓவியம் என்ன அனுபவத்தை அளிக்க எந்த அம்சங்கள் தேவையோ அதை மட்டுமே அவன் எடுத்துக் கொள்கிறான்.

இதற்கு ஒரு உதாரணத்தை  இப்போது காண்பிக்கிறேன்.

Picture credit - Raghu, The Hindu

இது பத்திரிகையில் வந்த புகைப்படம். என்னை உடனே ஈர்த்த விஷயம் அந்த பள்ளிப்பருவத்தின் சந்தோஷமும்  அதை முழுவதாக உணர்த்திய தாவலின் பிம்பமும். அதுதான் என் ஓவியத்தின் மையக் கருத்து (TOPIC).
ஆகவே புகைப்படத்தில் உள்ள மற்ற விஷயங்கள் இந்த  மையக் கருத்தை தொந்தரவு செய்யக் கூடாது. ஆதரவுதான் தர வேண்டும். இல்லையா?

எந்த அம்சங்கள் மையக் கருத்துக்கு தேவை இல்லை?
முக்கியமான தீர்மானம் 
இந்த காட்சி நீள வாட்டமாக LANDSCAPE MODEல் இல்லாமல் நெட்டுகுத்தாக PORTRAIT MODEல் இருந்தால் வித்தியாசமாகவும் ஒரு ENERGYயோடு  இருக்கும் என்று என் உள்ளுணர்வு சொல்லியது. 
அந்த சந்தோஷ தாவலின் பிம்பத்தையும் முழுமையாக காண்பித்தால்தான் காட்சி அழகுணர்ச்சியோடு இருக்கும் என்று தோணியது.



இன்னும் சில ஓவிய அமைப்பு நுட்பங்கள் 
1.பிம்ப வெளிச்சம் மேலிருந்து கீழ் நோக்கி அமைத்து, எல்லா அம்சங்களையும் இணைக்கின்றது .
2. சிறுவனின் பாதம் கட்டத்திற்கு வெளியே வந்து ஒரு 3D effect கொடுக்கின்றது .
3. அதே போல் எதிர்புறத்தில் நீரலை கட்டத்திற்கு வெளியே .
4. சிறுவர்களின் பிம்பத்தை சுற்றியுள்ள நீரை வரையவில்லை. ஆகவே பிம்பம் தனியாக ஒரு dramatic effect தருகின்றது.
5. Background கட்டத்தை ஒரு frame போல் முழுமையாக வரையாமல் அங்கங்கே கட்டத்தை உடைத்து open feel கொடுத்தது.

நாம் காணும் நிஜத்தை அப்படியே பிரதிபலிப்பது ஒரு கலைஞனின் வேலை அல்ல . அந்த நிஜத்தின் சாரத்தை பிழிந்து கலை நயத்தோடு, அழகுணர்ச்சியோடு ஒரு அனுபவத்தை அளிப்பதுதான் கலைஞனின் வேலை.    
- க்ராவ்மாகா ஸ்ரீராம் 

Comments